பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி | ரித்து வர்மா - வைஷ்ணவ் தேஜ் : அடுத்த நட்சத்திர காதல் ஜோடி | விஜய்யுடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன்? |
காமெடி மற்றும் குக் கலந்த நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்தது. கடைசி சில வாரங்களில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலை விலகியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்குக் காரணமானவர் 'குக்' ஆகக் கலந்து கொண்ட தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே தான் என பலரும் பேச ஆரம்பித்தார்கள்.
அனைவரும் எதிர்பார்த்தது போலவே 'விஜய் டிவியின் செல்ல மகள்' என்று அழைக்கப்பட்ட பிரியங்காதான் 'வின்னர்' ஆக தேர்வு செய்யப்பட்டார். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியிலிருந்து விலகியபின் மணிமேகலை வெளியிட்ட வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வைகள் கிடைத்தது. அவருக்கான ஆதரவும் அதிகமானது. அதனால் நிகழ்ச்சியின் கோமாளிகள் மூலம் மணிமேகலைக்கு சில பதிலடியை மறைமுகமாகக் கொடுத்தனர். ஆனால், அதெல்லாம் மணிமேகலைக்கான ஆதரவைக் குறைக்கவில்லை.
இதனிடையே, தான் வெற்றி பெற்றது குறித்து உணர்வுபூர்வமான பதிவொன்றை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார் பிரியங்கா. அதில் கமெண்ட் பகுதியில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து கமெண்ட் செய்துள்ளனர்.
காமெடியாக கடந்த ஐந்து சீசன்களாக வலம் வந்த நிகழ்ச்சியை கலக நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள் என அதன் ரசிகர்கள் கரித்துக் கொட்டியுள்ளார்கள்.