தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
இயக்குநர் திருச்செல்வம் நீண்ட இடைவெளிக்கு பின் 'எதிர்நீச்சல்' தொடரின் மூலம் சின்னத்திரை உலகில் அதிரடியான கம்பேக் கொடுத்துள்ளார். கதையின் நேர்த்தி, காட்சி வடிவமைப்பு, வசனம் என அனைத்திலும் டாப் மதிப்பெண்களை ஸ்கோர் செய்து வரும் 'எதிர்நீச்சல்' தொடர் இளைஞர் முதல் முதியவர் வரை ஆண் பெண் பாகுபாடில்லாமல் அனைவருக்கும் பிடித்த தொடராய் மாறியுள்ளது. அதிலும், அதகளமான எபிசோடுகளால் சமீப காலங்களில் டாப் டிஆர்பியை பிடித்து வருகிறது. இத்தகைய வெற்றியை பெற்றுள்ள இந்த தொடர் பிற மொழி சேனல்களில் ரீமேக் செய்யப்பட்டு தெலுங்கில் 'உப்பென்னா', மலையாளத்தில் 'கனல் பூவு', கன்னடத்தில் 'ஜனனி', பெங்காலியில் 'அலோர் தீக்கனா', மராத்தியில் 'சபாஷ் சன்னை' ஆகிய பெயர்களில் ஒளிபரப்பாகி வருகிறது. முன்னதாக தமிழ் தொடர்களில் 'கயல்', 'சுந்தரி' உள்ளிட்ட சில தொடர்களும் 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருந்தாலும், எதிர்நீச்சல் தொடர் மட்டுமே 5 மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.