தள்ளிப் போகிறது 'டுயூட்' | மீண்டும் விஷால், அஞ்சலி கூட்டணி | சிம்பு கையால் பட பெட்டிகளில் ரூ 500 : டி.ஆர் சொன்ன புது தகவல் | கமல்ஹாசன் தயாரிப்பில் பிரபுதேவா | 500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! |
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் மாரிமுத்து. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாகவும், மீம் மெட்டீரியலாகவும் இணையதளத்தில் டிரெண்டாகி வரும் மாரிமுத்து, எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், 'திருச்செல்வத்திடம் மூன்று மணிநேரம் கதை கேட்டு தான் நடிக்கவே ஒப்புகொண்டேன். இந்த சீரியல் 1500 எபிசோடை கடக்கும் என திருச்செல்வம் கூறியிருக்கிறார். அதனால் வேறு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. வேறு வாய்ப்புகள் அமைந்தால் பார்க்கலாம். வில்லன்களை பெண்கள் ரசிப்பது ரொம்பவே ஆச்சரியம். ஆனால், இந்த சீரியலால் பெண்களுக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது.' என்று கூறியுள்ளார். மாரிமுத்து தற்போது சினிமாவில் இந்தியன் 2, ஜெயிலர் உட்பட சில பெரிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.