ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழில் சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளிவந்த ' டிராகன்' படம் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் இந்த படத்தை பார்த்த பிறகு அஸ்வத் மாரிமுத்து மற்றும் படக்குழுவை அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து அஸ்வந்த் மாரிமுத்து வெளியிட்ட பதிவில், "என் நண்பர்களுக்கு தெரியும், நான் எவ்வளவு ஆசையா அவரை சந்திக்கணும்னு உழைச்சிட்டு இருந்தேன்னு. என் திறமையாலயும் உழைப்பாலயும் மட்டும் அவரை சந்திக்கணும், ஒரு நாள் அவரோட வேலை செய்யணும்னு நினைச்சேன். வேலை பார்க்க முடியுமான்னு தெரியல, ஆனா அவரை சந்திச்சிட்டேன். அவருக்கு நேர் எதிரா உட்கார்ந்துட்டேன். எப்போதும் நான்தான் ரொம்ப பேசுவேன், என் டீம் நான் எவ்ளோ பெரிய ரசிகன்னு தெரிஞ்சு, நான் பேசுவேன்னு காத்துகிட்டு இருந்தாங்க. ஆனா, அவர் என்னை உற்று பார்த்தப்போ, என் கண்ணுல தானா கண்ணீர் வந்துடுச்சு! என் டீம் ஆச்சரியப்பட்டாங்க! ஏன்? அந்த மனுஷன் மேல அவ்வளவு பாசம்! எவ்ளோ? அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது" என அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டுள்ளார்.