பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சின்னத்திரை செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் செலிபிரேட்டியாக மாறிவிட்டார். தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வரும் அவர், சொந்தமாக யூ-டியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்நிலையில், அனிதா சம்பத் தனக்கு கையில் ட்ரிப்ஸ் போட்டிருக்கும் மருத்துவமனை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் அனிதா சம்பத்தின் பதிவை தனது பக்கத்திலும் பகிர்ந்துள்ள அவரது கணவர், 'எல்லாம் சில நாளில் சரியாகிவிடும் பப்பு' என்று மட்டும் பதிவிட்டுள்ளார்.
அவரும் அனிதாவுக்கு என்ன ஆயிற்று என்பது குறித்து தெளிவாக எதுவும் குறிப்பிடவில்லை. எனவே அனிதாவுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டு ரசிகர்கள் சோகத்தில் புலம்ப ஆரம்பித்தனர்.
இந்நிலையில், அனிதா தனது அடுத்த பதிவில், 'எனக்கும் பிரபாவுக்கும் ஒன்றுமில்லை. நாங்கள் நன்றாக இருக்கிறோம். சில நாட்கள் கழித்து விளக்கமளிக்கிறேன். இப்போது எங்களுக்கு தனிப்பட்ட நேரம் தேவைப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அனிதா விரைவிலேயே பூரண குணமடைய வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.




