நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடியனாகவும் ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விருது நிகழ்ச்சிகளில் ஆங்கரிங்கும் செய்ய வருகிறார். அவருக்கு தற்போது வெள்ளித்திரையில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் தேடி வருகிறது.
இந்நிலையில், தனக்கு சம்பளமாக கிடைக்கும் பணத்தில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வரும் பாலா, குழந்தைகளின் படிப்பு, முதியோர்களின் பராமரிப்பு என ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்து வருகிறார். அந்த வரிசையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அவர் முதியோர் இல்லத்திற்காக புதிதாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த ஆம்புலன்ஸ் முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு பரிசோதனை நேரங்களில் பயன்படும் என்றும், தவிர முதியோர் இல்லத்தை சுற்றி இருக்கும் வயதானவர்களுக்கும் இலவசமாக சேவை வழங்கும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து இதுபோன்ற பல நல்ல விஷயங்களில் ஈடுபடும் பாலாவின் குணத்தை பலரும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.