ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
சீனாவை பூர்வீகமாக கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். போலீஸ் ஸ்டோரி, டிரங்கன் மாஸ்டர், ரஷ் ஹவர், கராத்தே கிட் உள்ளிட்ட பல படங்களின் மூலம் உலக புகழ்பெற்றவர். இவரது படங்கள் உலகம் முழுவதும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வருகிறது. 'கராத்தே கிட் 2' படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தனக்கு வயதாகி வருவதை சமீபத்தில் குறிப்பிட்ட ஜாக்கிசான் 'வயது முதிர்வை யாராலும் தடுக்க முடியாது. கடந்துவிட்ட இளமை யாருக்கும் திரும்பி வராது. அதற்கு நான் விதிவிலக்கல்ல' என்று தெரிவித்திருந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்த அவர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது வயதிற்கேற்ற வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜாக்கிசான் சாரிடபிள் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி உள்ள அவர், அதன்மூலம் 3,400 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துகளை பல்வேறு அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். இந்த தொகை ஏழை மக்களின் மருத்துவம், மற்றும் கல்விக்காக செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சிறிய வயதில் வறுமையால் தவித்திருக்கிறேன். அந்த கஷ்டம் எனக்கு தெரியும். நான் பட்ட கஷ்டங்கள் மற்றவர்கள் படக்கூடாது என்பதால்தான் இந்த முயற்சி. மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது வரும் சந்தோஷம் அளவிட முடியாதது'' என்று குறிப்பிட்டுள்ளார்.