'இந்தியன்' ஜுன் 7ம் தேதி ரீ-ரிலீஸ் : இன்று புதிய டிரைலர் வெளியீடு | அனைத்தும் முடிந்தது… : மீண்டு வருமா தமிழ் சினிமா? | பிரபாஸின் புஜ்ஜியை வடிவமைத்ததில் ஆனந்த் மஹிந்த்ரா பெருமிதம் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் ராம் ரிலீஸ் ; தயாரிப்பாளர் உறுதி | படப்பிடிப்பில் பிரித்விராஜிடம் இருமுகம் காட்டும் மோகன்லால் | விவாகரத்து செய்தி - நமீதா கொடுத்த விளக்கம்! | ஓடிடியால் தியேட்டருக்கு செல்லும் மனநிலை குறைந்து வருகிறது! -ஹிப் ஹாப் ஆதி பேச்சு | மே 28ம் தேதி அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அன்னதானம்! விஜய் வெளியிட்ட அறிக்கை | 3வது திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா வாசுதேவன்! | மோகனின் ஹரா படத்தின் டிரைலர் வெளியானது! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த முறை ஒளிபரப்பான சீசன் 6-ல் அசீமுக்கு பிக்பாஸ் டைட்டில் பட்டம் கொடுத்தது பல சர்ச்சைகளுக்குள்ளானது. எனினும், பிக்பாஸ் ரசிகர்கள் சீசன் 7 எப்போது? என ஆவலாக கேட்டு வந்தனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் பிக்பாஸ் சீசன் 7 குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. எப்போதுமே அக்டோபர் மாதம் ஆரம்பமாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இம்முறை ஆகஸ்ட் மாதமே தொடங்கவிருக்கிறதாம். இதற்கான புரோமோ ஷூட்டும் விரைவில் ஆரம்பமாகும் என்று சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் உலா வர ஆரம்பித்துள்ளன. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் படு சந்தோஷத்தில் உள்ளனர்.