போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
சோஷியல் மீடியாவில் பிரபலமாக வலம் வரும் வீஜே பார்வதி அவ்வப்போது வீடியோ-லாக்கில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்து புதுப்புது விசயங்களை தனது நேயர்களுடன் பகிர்ந்து வருகிறார். தைரியமான பெண்ணான பார்வதி முன்னாக ஆபத்தான விலங்குகளை செல்லபிராணிகளாக வளர்க்கும் ஒரு பெட் ஷாப்புக்கு சென்று வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போதும் அதே போல் மதுரையில் மலைபாம்பு வகைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் இடத்துக்கு சென்று அங்கே இருக்கும் பல விதமான பாம்புகளை கையில் பிடித்து கொஞ்சி விளையாடி வீடியோ போட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோவில் பார்வதியின் தைரியத்தை பார்த்து ரசிகர்கள் அவரை 'சிங்கப்பெண்ணே' ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.