‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில், சம்யுக்தா இதுகுறித்து விளக்கமளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனக்கும் அவருக்கும் 10 வயது வித்தியாசம். எனக்கு 22 அவருக்கு 32. இருந்தாலும் நான் ஓகே சொன்னேன். நல்லவரா இருந்தால் போதும் என்று நினைத்தேன். எங்கள் காதலை வெளிப்படுத்திய பிறகு தான் அவர் சுயரூபம் எனக்கு தெரிந்தது. அவர் மிரட்டலுக்கு பயந்து காலில் விழுவேன். செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்பேன். ப்ரேக்கப் என்று சொல்லி மிரட்டுவார். கல்யாணம் கூட கட்டாயப்படுத்தி செய்தார்' என்று அவரைப்பற்றி பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.
சம்யுக்தா விஷ்ணுகாந்த் குறித்து பேசிய அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் விஷ்ணுகாந்த் இப்படிப்பட்டவரா? என கோபத்துடன் அவரை விமர்சித்து வருகின்றனர்.




