என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ப்ரியங்கா நல்காரி. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. ரோஜா தொடர் நிறைவடைந்த பின் ஜீ தமிழின் 'சீதா ராமன்' தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். இதற்கிடையில், ராகுல் என்பவரை காதலித்து வந்த ரியங்கா, கடந்த மாதம் மலேசியாவுக்கு சென்று திடீரென திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு சீரியல் ஷூட்டிங்கிற்கு கூட மலேசியாவில் இருந்து தான் வந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் சீரியலிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து ப்ரியங்கா கூறிய போது, 'சீதா ராமன் தொடர் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், கணவர் சொல்கிற போது அதை தட்ட முடியவில்லை. அதனால் சீரியலை விட்டு விலகுகிறேன்' என்று கூறியிருக்கிறார்.