175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
பிரபல செய்திவாசிப்பாளரான மெர்சி சித்ரா அண்மையில் வெளியான துணிவு படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகளை தேடி வரும் மெர்சி சித்ரா, சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அட்ஜெஸ்மெண்ட் டார்ச்சர் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில், அவர் 'மீடியாவிற்குள் நான் வரும் போது இப்படியெல்லாம் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால், தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது எனக்கு எந்த பிரச்னையும் நடக்கவில்லை. எனவே தைரியத்துடன் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தேன். பலவிதமான எதிர்ப்புகள் வந்தது. சிலர் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றார்கள், சிலர் தவறாக பேசினார்கள், சிலர் இதை செய்தால் தான் வாய்ப்பு என்றார்கள். இப்படி மறைமுகமாகவும் நேரடியாகவும் அட்ஜெஸ்மெண்ட் கேட்டார்கள். அட்ஜெஸ்மெண்ட் செய்யவில்லை என்றால் சிலர் போட்டோவில் நான் நன்றாக இருப்பதாகவும் நேரில் கருப்பாக இருப்பதாகவும் விமர்சித்து ஒதுக்கினார்கள். இப்படி பல தடைகளை தாண்டி தான் துணிவு படத்தில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது' என்று அதில் கூறியுள்ளார். மீடியாவில் செய்திவாசிக்கும் ஒரு பெண்ணுக்கே இப்படி என்றால், எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவோடு வரும் பெண்களின் நிலை தான் என்ன?