சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

சின்னத்திரை தொடரில் இணைந்து நடித்த அர்னவும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு அர்னவ் இன்னொரு நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் செய்தார் திவ்யா. அந்த புகாரின் பேரில் அர்னவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவரை விட்டு பிரிந்த திவ்யா அதன்பிறகு ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த நிலையில் அர்னவ் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறியுள்ளார். திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு என்றும், அவர்தான் தன்னை துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. திவ்யா போலீசில் புகார் செய்தபோது திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்னவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அர்னவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அர்னவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.