'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
குக் வித் கோமாளி சீசன் 4 அண்மையில் தொடங்கி வழக்கம் போல் மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், வாரந்தோறும் ஏதாவது ஒரு கான்செப்ட்டில் கோமாளிகள் கெட்டப் போட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வார ஸ்பெஷலாக திரைப்படங்களில் பிரபலமான கதாபாத்திரங்களின் கெட்டப்புகளில் கோமாளிகள் வந்துள்ளனர். அதில், புகழ் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'காந்தாரா' படத்தின் பஞ்சுருளி கெட்டப்பில் வந்துள்ளார். பஞ்சுருளி போலவே மிரட்டலான பெர்பார்மென்ஸையும் தந்துள்ளார். இதை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு வீஜே விஷாஷ் அழுகிறார். காமெடியன் புகழுக்கு இப்படி ஒரு நடிப்பு திறமையா? என பலரும் அவரை பாராட்டி மோட்டிவேட் செய்துவருகின்றனர்.