மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' | ஐதராபாத்தில் ஆரம்பமாகும், நடக்கும் தமிழ் சினிமா…. இதுதான் தமிழ்ப்பற்றா ? | மம்முட்டி - கவுதம் மேனன் பட ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன் ? | மதுபாலாவின் 'சின்ன சின்ன ஆசை': வெளியிட்ட மணிரத்னம் | மோகன்லால் பிறந்தநாள் பரிசாக பலாப்பழ ஓவியம் வரைந்த ஓவியர் | சொல்லாமல் விலகிய பாலிவுட் நடிகர் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு அக்ஷய் குமார் வழக்கு | 'ஸ்படிகம்' இயக்குனரை அழைத்து வந்து வித்தியாசமான முறையில் கவுரவித்த சுரேஷ்கோபி பட இயக்குனர் |
சூப்பர் சிங்கர் பிரபலமான நித்யஸ்ரீ சிறுவயதிலேயே உலக அளவில் புகழ் பெற்று பல கச்சேரிகளில் பாடினார். யுவன் சங்கர் ராஜாவின் இசையில் 'அவன் இவன்' படத்தின் மூலம் சினிமா பின்னணி பாடகராக அறிமுகமானார். தென்னிந்திய மொழிகளில் சில பாடல்களை பாடியுள்ள அவர், அதர்வாவின் ஈட்டி படத்தில் அவருக்கு தங்கையாகவும் நடித்திருந்தார்.
தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்ட நித்யஸ்ரீ மாடலிங்கில் கவனம் செலுத்தி வருவதுடன் அடிக்கடி இண்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது. விரைவில் முழுநேர நடிகையாக எண்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.