அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தமிழ் சின்னத்திரையில் பல தொலைக்காட்சிகளில் சிங்கர்களுக்கான நிகழ்ச்சிகள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருப்பது விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். ஜூனியர் மற்றும் சீனியர்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட்டு வரும் இந்த போட்டி நிகழ்ச்சியில் சமீபத்தில் தான் சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8 வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது. இதில் அனைவரது மனம் கவர்ந்த ஸ்ரீதர் சேனா முதலிடத்தை பிடித்தார்.
இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியரின் 8-வது சீசன் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. புத்தம் புதுப்பொலிவுடன் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 19 ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது. இதில் நடுவர்களாக சின்னக்குயில் சித்ரா, சங்கர்மகாதேவன், கல்பனா ராகவேந்திரா ஆகியோர் பங்கேற்கின்றனர். மா கா பா ஆனந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். வருகிற டிசம்பர் 19 முதல், ஞாயிறு மதியம் 3 மணிக்கு சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 ஆரம்பமாகிறது.