அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

விஜய் டிவியில் 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா மற்றும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரின் ஹீரோ செந்தில் ஆகிய இருவரும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2016ஆம் ஆண்டு 'ஜூனியர் சூப்பர் ஸ்டார்' என்கிற குழந்தைகளுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. காமெடி, கலாட்டா, ஆட்டம், பாட்டு என குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சியாக சின்னத்திரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் சீசனில் பாக்யராஜ், குஷ்பு மற்றும் அர்ச்சனா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். இரண்டாவது சீசனில் பாக்யராஜ், ரோஜா, அர்ச்சனா ஆகியோரும், மூன்றாவது சீசனில் பாக்யராஜ், தேவயானி, ரக்ஷிதா லெஷ்மியும் நடுவர்களாக பங்கேற்றனர். இந்த மூன்று சீசனையும் பிரபல தொகுப்பாளினி கீர்த்தனா சாந்தனு தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் ஜூனியர் சூப்பர் ஸ்டாரின் நான்காவது சீசனை ஜீ தமிழ் டிவி மிக விரைவில் நடத்தவுள்ளது. இதில் நடுவர்களாக விஜய் டிவியின் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா மற்றும் ஆர்ஜே செந்திலுடன் சினிமா நடிகை சினேகாவும் பங்கேற்க உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சீசனையும் கீர்த்தனா சாந்தனு தான் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 26 முதல் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.