சினேகா கேட்ட கேள்வி : பதில் சொல்ல மறுத்த சேரன் | எளிமையாக நடந்த கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம் | சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் |

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகி அந்தஸ்த்தில் வந்திருக்க வேண்டியவர் ரோஷினி ஹரிப்ரியன். சின்னத்திரையில் நம்பர் 1 சீரியலாக வலம் வந்த 'பாரதி கண்ணம்மா' தொடரில் ஹீரோயினாக நடித்து கொண்டிருந்ததால் தனக்கு வந்த சில முத்தான சினிமா வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டார். அதில் ஒன்று தான் 'ஜெய்பீம்'. எனவே, இனிமேலும் சினிமா வாய்ப்புகளை தவறவிடக்கூடாது என்பதால் சீரியலை ஒதுக்கிவிட்டு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தற்போது குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள ரோஷினி இப்போதெல்லாம் அடிக்கடி போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ரோஷினியின் அழகில் மயங்கிய நெட்டீசன்கள் அவரை டார்க் சாக்லெட் என வர்ணித்துள்ளனர்.