கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி |
யூ-டியூப் தொகுப்பாளினியான வீஜே பார்வதி ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மிகவும் பிரபலமும் புகழும் கிடைத்தது. தற்போது மாடலிங்கிலும் இறங்கி கலக்கி வருகிறார். கவர்ச்சி நடிகையான மியா கலிபாவுடன் கம்பேர் செய்யும் அளவிற்கு அடிக்கடி ஹாட்டான போட்டோக்களையும் வெளியிட்டு நெட்டீசன்களை உசுப்பேற்றி வருகிறார்.
ஊர்சுற்றுவதில் அதிக ஆர்வமுள்ள பார்வதி, பல புதிய இடங்களுக்கு சுற்றுலா சென்று அந்த இடங்களை பற்றிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாலத்தீவில் சுற்றிக்கொண்டிருக்கும் அவர், பீச் ரிசார்ட்டில் அமர்ந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டீசன்கள் வழக்கம் போல் பார்வதியை கவர்ச்சி நடிகைகளுடன் ஒப்பிட்டு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.