இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
ஸ்பைடர் படத்தில் வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் சஞ்சய் என்ற சிறுவன் நடித்திருந்தார். சிறுவயதாக இருந்தாலும் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு இணையாக வில்லத்தனத்துடன் நடித்து பாராட்டுகளை பெற்றார். அதன்பிறகு சொல்லிக் கொள்ளும் அளவில் படங்கள் நடிக்கவில்லை என்றாலும், ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் ஹீரோயினுக்கு தம்பி கதபாத்திரத்தில் நடித்து வந்தார்.
கடந்த சில நாட்களாக 'செம்பருத்தி' தொடரின் கதையே வேற ட்ராக்கில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சஞ்சய் நடித்து வந்த தம்பி கதாபாத்திரமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் என்ன செய்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் புதிதாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சிறுவனாக இருந்த சஞ்சய் தற்போது ஆள் அடையாளமே தெரியாத வகையில் பெரியவனாக வளர்ந்து விட்டார். அவரது பெரும்பாலான ரீல்ஸ் வீடியோக்கள் சீரியல் நடிகை தக்ஷனாவுடன் இருப்பதால் தக்ஷனா நடித்து வரும் ஏதாவது சீரியலில் சஞ்சயும் என்ட்ரி கொடுத்திருப்பார் என தெரிய வருகிறது.