பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இந்த தொடரின் சீசன் 2 கொரோனா லாக்டவுனுக்கு பிறகு ஒளிபரப்பாக ஆரம்பமானது. சீசன் 2வில் செந்தில், ரக்ஷிதா, ராஜூ என பலரும் நடித்து வந்தனர். இந்நிலையில், திடீரென ரக்ஷிதாவும், அதன்பின் பிக்பாஸூக்காக ராஜூவும் சீரியலை விட்டு வெளியேறினர். இதனால், டிஆர்பியில் இந்த சீரியல் ஆட்டம் கண்டது.
இதனையடுத்து பலமுறை இந்த தொடர் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனாலும், மோனிஷா, பவித்ரா என வரிசையாக நடிகைகளை இறக்கி ஓரளவு ஓட்டி வந்தனர். சமீபத்தில் சரண்யாவின் திருமணத்தை வைத்து கூட சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. எனவே, இந்த தொடர் தற்போதைக்கு முடிவுக்கு வராது என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், கடைசி நாள் ஷூட்டிங்கை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.