மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர் வெற்றி படங்களை அடுத்து இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து 'பைசன் காள மாடன்' என்கிற படத்தை உருவாக்கி வருகின்றார்.
பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் அப்லாஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பல கட்டமாக திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. கபடி வீரராக இப்படத்தில் துருவ் விக்ரம் நடிக்கின்றார். இன்று இந்த படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு பிரமாண்டமான கபடி காட்சியுடன் நிறைவு பெற்றுள்ளது. இத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
பைசன் படப்பிடிப்பு நிறைவுப்பெற்றது குறித்து துருவ் விக்ரம் வெளியிட்ட பதிவில், ''பல மாத படப்பிடிப்பு. ரத்தம், வியர்வை, கண்ணீர் கடந்து இறுதியாக பைசன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.