அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பல வருட காலங்களாக பல ஹிட் சீரியல்களை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் தயாரித்த சித்தி 2 சீரியலும், திடீரென முடித்து வைக்கப்பட்டது. தற்போது கலைஞர் டிவியில் பொன்னி கேர் ஆப் வாணி ராணி என்கிற புதிய தொடரை ராதிகா தனது ராடன் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். வருகிற ஜூன் மாதம் முதல் இந்த தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் தற்போது பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி சஞ்சீவ் இணைந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் ராதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ப்ரீத்தி சஞ்சீவ் வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முன்னதாக கண்ணான கண்ணே தொடரில் வாசுகி என்ற கதாபாத்திரத்தில் ப்ரீத்தி நடித்து வந்தார். ஆனால், அவரது கதாபாத்திரம் விரைவிலேயே சீரியலை விட்டு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ப்ரீத்தி ராதிகாவின் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள செய்தி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.