ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், காமெடி ராஜா கலக்கல் ராணி, ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் விருது நிகழ்வில் பிரியங்காவிற்கு சிறந்த தொகுப்பாளர் 2022 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்கள், ப்ரியங்கா பிக்பாஸ் சீசன் 5 முடிந்து பல மாதங்களாக விஜய் டிவியில் பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. அப்படியிருக்க அவருக்கு ஏன் இந்த ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
டிடிக்கு அடுத்தப்படியாக பெண் தொகுப்பாளர்களில் கணிசமான ரசிகர்களை பெற்றுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே 2016 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்று முறை விஜய் டெலிவிஷன் விருதை சிறந்த பெண் தொகுப்பாளர் பிரிவில் வாங்கியுள்ளார்.