நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

அதிக ரசிகர்களை பெற்றிருக்கும் தொடர்களில் ஒன்று 'அன்பே வா'. இதில் டெல்னா டேவிஸ், விராட், கன்யா பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ஷில்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் அட்டகசாமான நடிப்பை வெளிபடுத்தி வந்தவர் நடிகை சுப்புலெட்சுமி ரங்கன்.
சின்னத்திரை வில்லி நடிகைகளில் சுப்புலெட்சுமி தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில், சுப்புலெட்சுமி தற்போது திடீரென அன்பே வா தொடரிலிருந்து வெளியேறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வெளியேறியதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அன்பே வா தொடர் கொலை, போலீஸ் விசாரணை என பரபரப்பான முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த தொடரின் முக்கிய வில்லி நடிகை விலகியிருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அதேசமயம் இனி சுப்புலெட்சுமிக்கு பதிலாக ஷில்பா கதாபாத்திரத்தில் நித்யா ராஜ் என்ற நடிகை நடிக்கவுள்ளார். நித்யா ராஜ் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'என்றென்றும் புன்னகை', 'சூர்ய வம்சம்' மற்றும் கலர்ஸ் தமிழின் 'எங்க வீட்டு மீனாட்சி' ஆகிய ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.