இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் சிம்பு வந்த எபிசோடு கலகலப்பாக சென்றது. அடுத்த வாரம் இறுதிப்போட்டி என்பதால், போட்டியாளர்கள் ஸ்ட்ரெஸ் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சிம்பு அட்வைஸ் கூறினார். மேலும், போட்டியாளர்களின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடியோ கால் மூலம் பிக்பாஸ் வீட்டினுள் பேசினர். இதற்கிடையில், இன்னொரு பெட்டியுடன் வந்த சிம்பு அதில் 25 லட்ச ரூபாய் இருப்பதாகவும், அதை எடுத்துக்கொண்டு யார் வெளியேற போகிறீர்கள் என்று கேட்டார். உடனே, ஜூலி பெட்டியை எடுத்துக்கொண்டு நான் போகிறேன் என்று கூறினார். ஆனால், சிம்பு நான் சும்மா ப்ராங்க் செய்தேன். பணப்பெட்டி டாஸ்க் இல்லை என பங்கமாக ஜூலியை கலாய்த்துவிட்டார். ஜூலி பல்பு வாங்கிய இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.