சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளின் என்றால் அது டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். ஆனால், அவரது அக்கா ப்ரியதர்ஷினி டிடிக்கும் முன்பாகவே தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் பிரியதர்ஷினி முன்பு போல பெரிதாக திரையிலோ, பொது மேடையிலோ தோன்றுவது இல்லை. இந்நிலையில், அவர் தனது கணவருடன் பாலைவனத்தில் நடக்கும் புகைப்படத்தை வெளியிட அந்த போட்டோ வைரலானது. இதனையடுத்து அவரது சமூகவலைதள பக்கத்தை தேடிப்பிடித்த நெட்டிசன்கள் பிரியதர்ஷினி அவரது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆச்சரியத்துடன் பார்த்து, அவரது குடும்ப புகைப்படங்களை சோஷியல் மீடியாக்களில் வைரல் செய்து வருகின்றனர்.
டிடியை போலவே பன்முகத் திறமை கொண்ட பிரியதர்ஷினி பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனத்தில் திறமை வாய்ந்தவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பிரியதர்ஷினி சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். மானாட மயிலாட உள்ளிட்ட பல ஹிட் நிகழ்ச்சிகளையும், மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.