சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
சீரியல்களில் அதிகமாக தோன்றும் நடிகர் மானஸ் சாவலி. ராதிகாவின் வாணி ராணி தொடரில் அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பான நடிகர் என பெயர் பெற்றுள்ளார். அவர் தற்போது 'கண்ணான கண்ணே' தொடரிலும் வில்லன் கதாபாத்திரத்தி தான் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களில் ஒன்றான 'ரஜினி' தொடரில் இணைந்துள்ளார். ஸ்ரேயா அஞ்சன் கதாநாயகியாக நடிக்கும் ரஜினி தொடர் கிட்டத்தட்ட 'கயல்' தொடரை போல் உள்ளது. சின்னத்திரையின் பிரபல வில்லன் நடிகரான மானஸ் சாவலியும் இந்த தொடரில் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.