மலையாள திருநங்கை நடிகை மர்ம மரணம் | அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் |
பிரபல நடன இயக்குநர் மற்றும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருந்தாலும், அமீருக்கு அடையாளம் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தான். அதுவரை அமீர் பற்றி தெரியாத பலரும், அமீரின் சோகக்கதையை ஊடகத்தின் வாயிலாக தெரிந்து கொண்டனர். சிறுவயதிலேயே தந்தையையும், அதன் பிறகு தாயையும் இழந்த அமீர் தற்போது சமூகத்தில் நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அவர், முதல் செயலாக தனது அம்மாவின் சமாதிக்கு சென்று வணங்கினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், 'அம்மா இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருக்கும். அம்மா இருந்தப்ப எங்களுக்கு சாப்பாடு கொடுப்பாங்க. ஆனா அவங்க சாப்பிட்டு இருப்பாங்களான்னு தெரியாது. இப்ப அவங்க உயிரோடு இருந்திருந்தா அவங்க பாக்காத வாழ்க்கைய காட்டிருப்பேன். அவங்களுக்கு நல்ல டிரெஸ் வாங்கி கொடுத்திருப்பேன். எங்க அம்மா இறந்து போன நாள் இன்னும் என்னோட கனவுல வருது. இப்ப நான் நல்லா இருக்கும் போது அம்மா கூட இல்லையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு' என நினைத்து அழுகிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. அதைபார்க்கும் பலரும் அமீருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.