டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பாலிவுட்டில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்த துரந்தர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஸ்பை திரில்லர் படமாக வெளியான இந்த படம் பத்தே நாட்களில் 550 கோடிக்கு மேல் வசூலித்து இந்த வருட இறுதியில் பாலிவுட் சினிமாவிற்கு புத்துணர்ச்சியை ஊட்டியுள்ளது. அதே சமயம் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இந்த படத்தை பாராட்டி வெளியிட்டுள்ள பதிவில் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “உண்மையிலேயே துரந்தர் போல ஒரு திரைப்படத்தை உருவாக்குவது பயங்கரமான ஒன்றுதான். அது மட்டுமல்ல இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்காக மூன்று மாதங்கள் நம்மை காத்திருக்க சொல்கிறார்கள். எங்கள் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். முன்கூட்டியே இதன் ரிலீஸ் செய்தியை அறிவியுங்கள்” என்று கூறியுள்ளார். அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் வெளியாகும் என்பது உறுதியாகிறது.