இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி |

பிரபல நட்சத்திர தொகுப்பாளினி அஞ்சனா. சின்னத்திரையில் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். பிரமாண்ட திரைப்பட விழாக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார். கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் அஞ்சனாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வாக இருந்தது. பொதுவான சோர்வு என்று நினைத்தேன். ஆனால் காய்ச்சல் வந்தவுடன், இரண்டு சோதனைகள் செய்யப்பட்டன, அதன் முடிவுகள் நெகட்டிவ் என்றே வந்தது. அதன்பிறகான சோதனையில் பாசிட்டிவ் என வந்தது.
மக்கள் நம்புவது போல் இதை சமாளிப்பது எளிதானது அல்ல. தீவிரம் குறைந்திருக்கலாம், ஆனாலும், இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பாக இருங்கள். என்கிறார் அஞ்சனா.