சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

யூ-டியூப் வலைத்தளத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் வீஜே பார்வதி. அப்போதே ஏடா கூடமான கான்செப்டுகளில் ப்ராங்க் நிகழ்ச்சிகளை செய்து வைரல் நாயகியாக வலம் வந்தார். ஜீ தமிழின் சர்வைவர் நிகழ்ச்சிக்குள் சென்ற அவர், அங்கும் சர்ச்சையை கிளப்பி ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார். கிளாமரான போட்டோஷூட்களில் களமிறங்கி இணையத்தில் டிரெண்டாகி வந்த பார்வதியை சிலர், மியா கலிபாவுடன் ஒப்பிட்டு கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ஆதரவாக சிலர் பதிவிட்டு வந்தாலும் சிலர் அநாகரீகமான முறையில் பார்வதியை பேசியுள்ளனர். அதில், 'ஒருவர் நீயெல்லாம் மதுரை பொண்ணுன்னு வெளிய சொல்லாத' என கமெண்ட் செய்து அதில் வீஜே பார்வதியை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள வீஜே பார்வதி அவர் ஸ்டைலிலேயே திட்டிவிட்டு 'உன் வேலைய பாருன்னு' பதிலடி கொடுத்துள்ளார்.
வீஜே பார்வதியை சில நெட்டீசன்கள் அடிக்கடி தகாத வார்த்தையில் திட்டி வருகின்றனர். ஆனால், அதை சாதரணமாக கடந்து செல்லும் பார்வதி, அவ்வப்போது இதுபோல் அத்துமீறுபவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.




