ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பிரபலமானவர் மணிமேகலை. ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலை சில காலங்களுக்கு திரையில் தோன்றாமல் இருந்தார். அதன்பின் இருவரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரையில் தோன்றினர். தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1-ல் கோமாளியாக கலந்து கொண்ட மணிமேகலை மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்தார். இன்றைய நாளில் சமூக வலைத்தளங்களில் கொடிக்கட்டும் பறவைகளான ஹுசைன், மணிமேகலை கார்களாக வாங்கி குவித்து வருகின்றனர். இந்நிலையில் மணிமேகலையின் சம்பளம் குறித்த கேள்வி பலருக்கும் எழுந்தது. தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் மணிமேகலை ஒரு நாளைக்கு 60,000 ரூபாய் சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்புறம் என்ன அடுத்த மாசம் ஆடி கார் தானே?