நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
இன்ஸ்டாகிராமில் டிடி வெளியிட்ட பதிவு ஒன்றினால் பலரும் டிடிக்கு மீண்டும் திருமணமா என கேட்டு வருகின்றனர். தமிழில் முன்னணி தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான டிடி ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் செலிபிரேட்டி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். திவ்யதர்ஷினி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. இருவரும் 2017 ஆம் ஆண்டு விவாகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது கேரியரில் கம்பேக் கொடுத்து கலக்கி வரும் டிடி சமீபகாலங்களில் சுற்றுலா பயணத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.
அழகான இடங்கள், வித்தியாசமன உணவுகள் என தனது பயணத்தை என்ஜாய் செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அதன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், சீஸ் வகை உணவுகளை விரும்பி சாப்பிடும் டிடி சமீபத்தில் ஒரு ரெஸ்டாரண்டில் பீட்சாவை சாப்பிட்டுவிட்டு, பீட்சாவை செய்த சமையல்காரரை திருமணம் செய்துக் கொள்ள விரும்புவதாகக் பதிவிட்டிருந்தார். இதை பார்க்கும் பலரும் டிடிக்கு திருமணமா என கேள்விகள் எழுப்பினர். ஆனால், இது சீரியஸாக சொல்லப்படவில்லை வேடிக்கையாக டிடி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட வாழ்க்கையில் தனது சோகங்களை மறந்து சிரித்த முகத்துடன் இருக்கும் டிடி-க்கு அவரது ரசிகர்கள் எப்போதுமே தங்களது அன்பு மழையை பொழிந்து வருகின்றனர்.