ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் மயிலா என்ற வேலைக்காரப் பெண் கதாபாத்திரத்தி நடித்து வருகிறார் நவ்யா சுஜி. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கல்லூரி படிக்கும் போதே மாடலிங் துறையில் நுழைந்த நவ்யா, பல நிகழ்ச்சிகளில் ராம்ப் வாக் மாடல், டிவி ஷோக்களில் கலந்து கொண்டார். வெள்ளித்திரையில் தமிழ் படம் 2-வில் நடிகையாக அறிமுகமாகிய அவர் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வந்தார்.
இந்நிலையில் அவர் தற்போது ராஜா ராணி 2 சீரியலில் வேலைக்காரப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மயிலாவாக மக்களிடம் பிரபலமாகியுள்ள நவ்யா போட்டோஷூட்களில் தெறிக்கவிட்டு வருகிறார். பிட்னஸ் ப்ரீக்கான நவ்யா தற்போது ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் 'வேலைக்கார மயிலாவா இது?' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.