ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
பிக்பாஸ் வீட்டினுள் இசைவாணிக்கும், இமான் அண்ணாச்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வரும் நிலையில், தனது அப்பாவை இசைவாணி தவறாக புரிந்து கொண்டிருப்பதாக இமானின் மகள் பேட்டி அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடி வருபவர்களில் இமான் அண்ணாச்சியும் ஒருவர். இந்நிலையில் இசைவாணிக்கும், இமான் அண்ணாச்சிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதை குறித்து அவரது மகள் ஜெஃபி ஷைனி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், 'பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய 4 சீசனுக்குமே அப்பாவை கூப்பிட்டாங்க. இந்த சீசனுக்கு அப்பா போறேன்னு சொன்னதுமே மகிழ்ச்சியா இருந்துச்சு. அப்பா எப்போவுமே ரொம்ப கூலா இருப்பாங்க. எல்லாரையும் சிரிக்க வச்சுட்டே இருப்பாங்க.
ராஜூ அண்ணாவும் யாரையும் ஹர்ட் பண்ணாம சிரிக்க வைக்கிறதுனால ரெண்டு பேருக்கும் நல்ல ஜெல் ஆகிடுச்சு. இசைவாணி அக்காகிட்ட அப்பா அவங்க நல்லதுக்காக தான் சில விஷயங்கள சொல்றாங்க. ஆனா, அத அக்கா தப்பா புரிஞ்சிக்கிறாங்க. இதனால தான் இரண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி முரண்பாடு வருது' என்று கூறியுள்ளார்.
பரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார். கடைசி வரை வீட்டில் இருந்து பிக்பாஸ் டைட்டிலை இமான் அண்ணாச்சி ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.