நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் |

விஜய் டிவி சூப்பர் சிங்கரான சவுந்தர்யா பாலா நந்தகுமார் நீண்ட இடைவெளிக்கு பின் இப்போது சின்னத்திரைக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
சூப்பர் சிங்கர் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் சவுந்தர்யா பாலா நந்தகுமார். தொடர்ந்து விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார். வெள்ளித்திரையில் 'கபாலி', 'மாஸ்டர்' உள்ளிட்ட சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், ஒரு நடிகை என்ற அந்தஸ்தை சவுந்தர்யாவுக்கு பெற்று தந்தது சின்னத்திரை தான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல்நிலவு' தொடரில் சவுந்தர்யா ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் ஏகபோக ஆதரவை பெற்றார். அந்த சீரியல் முடிந்த பின் வேறு சீரியலில் கமிட்டாவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இந்நிலையில் ஜீ தமிழில் நேற்று, ஞாயிறு அன்று ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் திருமண வைபோகம் ஸ்பெஷல் எபிசோடில் சவுந்தர்யா மணமகளாக நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக வளர்த்தெடுக்கப்படுமா அல்லது கெஸ்ட் அப்பியரன்ஸ் போன்ற சிறு ரோலாக போய்விடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் நீண்ட இடைவெளிக்கு பின் சவுந்தர்யா சின்னத்திரையில் நடிகையாக ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளனர்.