ஆக.,11ல் ‛கோப்ரா' ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு | ரஜினி படங்களை குற்றம் சாட்டிய ஆர்ஜே பாலாஜி | விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில் சூர்யா | சந்திரமுகி 2 கை மாறியதா? | சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீஸ் எப்போது | நடிகைகளுக்கு மட்டும்தான் போட்டோ ஷுட்டா ? கலக்கும் கமல்ஹாசன் | தங்கை நிக்கி திருமணத்தன்று குழந்தை பெற்ற அக்கா சஞ்சனா | டாக்டர் ராஜசேகர் குடும்பத்திற்கு இன்று டபுள் ரிலீஸ் | பசுவுக்கு ஒரு நியாயம், கோழிக்கு ஒரு நியாயமா - நிகிலா விமல் | என்ன சொல்கிறார் 'சூப்பர் குயின்' பார்வதி |
சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் கலகலப்பு 2. நடிகர்கள் ஜீவா, மிர்ச்சி சிவா ஆகியோரின் நகைச்சுவை நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஜீவாவும், மிர்ச்சி சிவாவும் புதிய படத்தில் இணையவுள்ளனர்.
கன்னட இயக்குனர் பொன் குமரன் இயக்க உள்ள இந்த படத்திற்கு ‛கோல்மால் என பெயரிட்டுள்ளனர். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ள இப்படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக பாயல் ராஜ்புட் மற்றும் தாராள பிரபு பட நடிகை தான்யா ஹோப் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக மொரீசியஸில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.