'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்திலேயே யாரும் எதிர்பாராத வகையில் நமிதா மாரிமுத்து வெளியேறிவுள்ளார்.
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒருவராக திருநங்கை நமிதா மாரிமுத்துவும் கலந்து கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் திருநங்கை என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது. நமிதாவின் சோகக்கதையை கேட்ட பலரும் அவருடைய அனுதாபியாக மாறியிருந்தார்கள். இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தால் நமிதா போட்டியை விட்டு விலகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய எபிசோடில் இது பற்றி பேசிய கமல், பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களும் சரி, வெளியே இருப்பவர்களும் சரி, ஏன் நானும் கூட நமிதா மாரிமுத்துவிடம் மனதை பறிகொடுத்துவிட்டோம். இப்படி ஒரு பிரதிநிதி மிகவும் முக்கியம் என நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். தொடர் இடர் வந்தாலும் வெற்றிகளை தேடி பெற்ற நமிதா இதுபோலவே செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன் என கமல் கூறியுள்ளார். காரணங்கள் சரிவர தெரியாத நிலையில் முதல் வாரத்திலேயே நமிதா வெளியேறி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.