சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
விஜய் டிவி பாரதி கண்ணம்மா தொடரில் சவுந்தர்ய லட்சுமி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார் குழந்தை நட்சத்திரமான ரக்சா. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றுள்ள ரக்சா, நடிப்பில் தனது அப்பாவையும், அக்காவையும் மிஞ்சும் அளவுக்கு நடிகையாக வளர்ந்து விட்டார்.
ரக்சாவின் தந்தை ஷ்யாம் கோலங்கள், தென்றல் ஆகிய தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது பூவே உனக்காக தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல ஷ்யாமின் மூத்த மகள் நிவாஷினியும் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடிப்பதற்கு அறிமுகமாகி தற்போது, விஜய் டிவியின் செந்தூரப் பூவே தொடரில் நடித்து வருகிறார்.
ஆனால் இவர்களை விடவும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் ரக்சா அதிக பிரபலமாகியுள்ளார். இந்நிலையில் ரக்சாவின் பேமிலி போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள் குடும்பமே சீரியல் குடும்பமா இருக்கும் போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.