ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
வெள்ளித்திரையில் டான்சராக கலக்கி வந்த ஹேமா தற்போது சீரியலில் நடிகையாக எண்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார். டான்சர் மற்றும் கொரியோகிராபரான ஹேமா இதுவரை 500 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ளார். முன்னணி நடிகர்களின் ஹிட் பாடல்கள் அனைத்திலும் நடனமாடியுள்ள இவர் சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார். குறிப்பாக தனுஷின் ரகிட ரகிட பாடலில் இவர் கொடுத்துள்ள க்யூட் மூவ்மெண்ட்ஸ்க்கு மீம்ஸ்கள் பறந்தன.
இந்நிலையில் இவர் தற்போது சன் டிவியின் 'அன்பே வா' தொடரில் கதாநாயகியின் தோழி கதாபாத்திரத்தில் அஸ்வினியாக நடித்து வருகிறார். இது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட அவர், 'சன் டிவியின் ரோஜா சீரியலில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட போயிருந்தேன். அங்கே என்னை பார்த்துவிட்டு நடிக்க ஆர்வம் இருக்கா? என டைரக்டர் கேட்டார். நான் இருக்குன்னு சொன்னேன். அப்படித்தான் 'அன்பே வா' சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது' என கூறியுள்ளார். டான்சராக இருக்கும்போதே மிகவும் புகழ் பெற்ற ஹேமா தற்போது நடிகையாக சின்னத்திரை வழியே பல லட்ச ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.