ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! |

நடிகர் கமல்ஹாசனின் 71வது பிறந்தநாள் கொண்டாட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரின் ராஜ்கமல் ஆபீசில் நேற்று எளிமையாக நடந்துள்ளது. பொதுவாக, கட்சி ஆபீசில் அல்லது ஸ்டார் ஓட்டலில் பிறந்தநாள் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்வார் கமல். பின்னர் தடபுடல் விருந்து இருக்கும். இந்தமுறை சென்னை ஆழ்வார்பேட்டை கட்சி ஆபீசில் அது நடக்கவில்லை. பக்கத்தில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் ஆபீசில் காலை முதல் நண்பர்கள், சினிமாகாரர்கள், அரசியல்வாதிகள் பிறந்தநாள் வாழ்த்துகளை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிறந்தநாளில் கமல்ஹாசன் ஊரில் இல்லை என்று தகவல் பரவிய நிலையில், கூட்டத்தை தவிர்க்க அவர் தரப்பு இப்படி சொன்னதாக கூறப்படுகிறது. காலையில் நடந்த நிகழ்ச்சியில் முக்கியமான சில நண்பர்கள், சினிமா சங்க நிர்வாகிகள், சில அரசியல்வாதிகளை மட்டும் கமல்ஹாசன் சந்தித்துள்ளார். காலை அவர் ஆபீஸ் வந்தவர்களுக்கு பிரியாணி, சைவ விருந்தும் பரிமாறப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசனும் கமலுடன் இருந்துள்ளார். சில தினங்களுக்குமுன்பு கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் பட அறிவிப்பு வெளியான நிலையில், பைட் மாஸ்டர் அன்பறிவ் இயக்கத்தில் அவர் நடிக்கும் பட அறிவிப்பு வெளியானது. பொதுவாக கமல்ஹாசன் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு, பெரிய விருந்து பரிமாறப்பட்டு பெரிதாக நடக்கும். ஆனாலும், அவர் ராஜ்யசபா எம்பி ஆன பின் வந்துள்ள இந்த பிறந்தநாள் எளிமையாவே நடந்துள்ளது.