Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தந்தை என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாது; மனம் திறக்கும் ரேகா

10 அக், 2021 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Rekha-said-about-her-dad-Gemini-Ganesan

ஹிந்தி திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து, இன்று வரையிலும் திரையுலகின் நட்சத்திர நாயகியாக இருப்பவர் நடிகை ரேகா. தமிழ்த் திரையுலகின் காதல் மன்னன் என அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் மகளான ரேகா, தனது இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்துவர். பிறகு இந்தி படங்களின் பிரபல கதாநாயகியாக மாறினார். தனது நடிப்பு திறமையின் மூலம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை 180 படங்களில் நடித்துள்ள ரேகா, இன்று (அக்.,10) தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.


இந்நிலையில், அவர் தனது தந்தை ஜெமினி கணேசன் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‛நான் குழந்தையாக இருக்கும்போதே அவர் எங்கள் வாழ்க்கையில் இருந்து விலகியிருந்தார். அவர் வீட்டில் இருந்த நேரம் கூட எனக்கு நினைவில் இல்லை. அதேநேரத்தில் அவர் என் அம்மாவின் அற்புதமான காதலன் மட்டுமல்ல திரையிலும் காதல் மன்னனாக இருந்தார். அவரை திரையில் பார்த்துபோது நான் முற்றிலும் ஈர்க்கப்பட்டேன். அவரின் குழந்தைகள் அனைவரும் ஒரே பள்ளியில் பயின்றோம். ஓரிரு முறை சில குழந்தைகளை அவர் பள்ளியில் விட வந்துள்ளார். அப்போது, ‛ஓ இவர் தான் அப்பா என்ற ரீதியில் பார்த்திருக்கிறேன். ஆனால், அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.


அவரும் என்னை கவனித்ததும் இல்லை, என்னை பார்க்கவும் இல்லை. தந்தை என்ற வார்த்தையின் அர்த்தம் எனக்குத் தெரியாது. எனக்கு ஒரே தந்தை தேவாலயத்தில் இருந்தார். ஒரு தந்தையின் அன்பு தாயின் அன்பிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும். ஆனால் அது பற்றி எனக்கு உண்மையில் தெரியாது, என்றார்.


ரேகாவின் அட்டகாசமான ஸ்டில்ஸ்















Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஷாருக்கான் மகனுக்கு ஆதரவு அளிப்பதா? ஹிருத்திக் ரோஷன் மீது பாய்ந்த கங்கனா ரணாவத்!ஷாருக்கான் மகனுக்கு ஆதரவு அளிப்பதா? ... துல்கர் சல்மான் நடிப்பில் இந்தியில் உருவாகும் 'சுப்' துல்கர் சல்மான் நடிப்பில் இந்தியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Akash - Herndon,யூ.எஸ்.ஏ
01 நவ, 2021 - 21:30 Report Abuse
Akash Bad mouthing father...is it required?
Rate this:
baygonspray - Aryan,ஈரான்
12 அக், 2021 - 18:22 Report Abuse
baygonspray ஊடகங்கள் விமர்சிப்பது இல்லை
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
11 அக், 2021 - 14:40 Report Abuse
VIDHURAN ரேகா ஒரு நடிகை அவருக்கு இப்போது பிறந்தநாள் வாழ்த்துக்கள் அத்துடன் நிறுத்தி கொள்வது நல்லது அதற்குமேல் நாம் அறிந்து கொள்ள நினைத்தால் நமக்கு தான் அசிங்கம். பிறரது தனிப்பட்டவாழ்க்கை எப்போதும் சுகந்த மனம் வீசாது.
Rate this:
Ranganathan - Doha,கத்தார்
11 அக், 2021 - 10:32 Report Abuse
Ranganathan இது ஜெமினி கணேசனுக்கு கேவலம். Inspite of no support from Father, Rekha established herself. I salute Rekha and appreciate her .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in