'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' ஷமிதாப் என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் தான் இயக்குனர் பால்கி. இந்தநிலையில் கார்வான், தி சோயா பேக்டர் என ஏற்கனவே இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான் தற்போது இயக்குனர் பால்கியின் டைரக்சனில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியது. இந்தநிலையில் இந்தப்படத்திற்கு 'சுப்' என டைட்டில் வைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ரிவெஞ்ச் ஆப் தி ஆர்டிஸ்ட்' என டேக்லைனுடன் வெளியாகியுள்ள படத்தின் டைட்டில் போஸ்டர் இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இருக்கை நுனியில் அமரவைக்கும் த்ரில்லர் படமாக இருக்கும் என சொல்லாமல் சொல்கிறது.