இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
ஹிந்தி திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து, இன்று வரையிலும் திரையுலகின் நட்சத்திர நாயகியாக இருப்பவர் நடிகை ரேகா. தமிழ்த் திரையுலகின் காதல் மன்னன் என அழைக்கப்பட்ட ஜெமினி கணேசனின் மகளான ரேகா, தனது இளம் வயதிலேயே திரையுலகில் நுழைந்துவர். பிறகு இந்தி படங்களின் பிரபல கதாநாயகியாக மாறினார். தனது நடிப்பு திறமையின் மூலம் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதுவரை 180 படங்களில் நடித்துள்ள ரேகா, இன்று (அக்.,10) தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், அவர் தனது தந்தை ஜெமினி கணேசன் குறித்து கருத்து தெரிவிக்கையில், ‛நான் குழந்தையாக இருக்கும்போதே அவர் எங்கள் வாழ்க்கையில் இருந்து விலகியிருந்தார். அவர் வீட்டில் இருந்த நேரம் கூட எனக்கு நினைவில் இல்லை. அதேநேரத்தில் அவர் என் அம்மாவின் அற்புதமான காதலன் மட்டுமல்ல திரையிலும் காதல் மன்னனாக இருந்தார். அவரை திரையில் பார்த்துபோது நான் முற்றிலும் ஈர்க்கப்பட்டேன். அவரின் குழந்தைகள் அனைவரும் ஒரே பள்ளியில் பயின்றோம். ஓரிரு முறை சில குழந்தைகளை அவர் பள்ளியில் விட வந்துள்ளார். அப்போது, ‛ஓ இவர் தான் அப்பா என்ற ரீதியில் பார்த்திருக்கிறேன். ஆனால், அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
அவரும் என்னை கவனித்ததும் இல்லை, என்னை பார்க்கவும் இல்லை. தந்தை என்ற வார்த்தையின் அர்த்தம் எனக்குத் தெரியாது. எனக்கு ஒரே தந்தை தேவாலயத்தில் இருந்தார். ஒரு தந்தையின் அன்பு தாயின் அன்பிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்க வேண்டும். ஆனால் அது பற்றி எனக்கு உண்மையில் தெரியாது, என்றார்.
ரேகாவின் அட்டகாசமான ஸ்டில்ஸ்