6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… | 'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம் | வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை முதல்வருக்கு பாலா வாழ்த்து செய்தி |

ஜெமினி கணேசன் இரண்டு வேடங்களில் நடித்த படம் மிகவும் குறைவு. அவற்றில் முக்கியமான படம் 'மனம்போல மாங்கல்யம்'. இந்த படத்தை பி.புல்லையா இயக்கினார். அடிகபள்ளி ராமராவ் இசை அமைத்தார்.
ஜெமினி கணேசனுடன், சாவித்ரி, சுரபி பாலசரஸ்வதி, சந்தானலட்சுமி, கே.சாரங்கபாணி உள்படபலர் நடித்தனர்.
தீவிரமாக காதலிக்கும் ஜெமினி கணேசன், சாவித்ரிக்கு இடையில் ஜெமினி கணேசன் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்து நுழைந்தால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவையாக சொன்ன படம்.
படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. ஜெமினி கணேசன் நடிப்பில் வெளிவந்த படங்களில் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்ற படம் இது. இந்த படத்தில் நடிக்கும்போது வெறும் கே.கணேஷ் என்ற பெயரிலேயே நடித்தார். வயதுக்கு மீறிய தோற்றம் கொண்டவர் என்ற விமர்சனம் ஜெமினி மீது இருந்தது. அதை மாற்றிய படம் இது.




