'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
'சிந்து சமவெளி' படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். அதன்பிறகு மைனா, வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி, வேலையில்லா பட்டதாரி, வேலையில்லா பட்டதாரி - 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் காதல் ஏற்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் ஒன்றாக இருந்த அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பிரிந்தனர்.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அமலா பால், கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பாராட்டை பெற்றார். இந்த படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கிலும் நடித்து வரும் இவர், குடி யெடமைதே என்ற வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
முன்னணி நடிகையாக இருந்தபோதிலும் படவாய்ப்பை பிடிக்க தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட்டை வெளியிட்டு வருகிறார். இவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் டிரான்ஸ்பிரன்ட்டான கருப்பு நிற புடவையில் கிளாமர் புகைப்படங்களை அமலாபால் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.