அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நடிகர் கமல்ஹாசன் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தனது திறமையால் படிபடியாக முன்னேறி முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டவர்களோடும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக மாறியுள்ள ஸ்ருதிஹாசன், 'சலார்' படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். நடிப்பு, நடனம், பாடகி என பன்முக திறமைக்கொண்டு சினிமாவில் பணியாற்றி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் ஸ்ருதிஹாசன்.
இதற்கிடையே தனது சமீபத்திய பதிவில், ஸ்ருதி ஹாசன் தனது முதுகை காட்டியவாறு போஸ் கொடுத்துள்ளார். கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசனின் முதுகில் 'ஷ்ருதி' என எழுதப்பட்டுள்ளது. அந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவர், "என் பெயரைச் சொல்லுங்கள்-சத்தமாகச் சொல்லுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் கமெண்ட் பகுதியை தங்களது அன்பால் நிரப்பி வருகிறார்கள்.