ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் |
தங்கள் கதைக்கான ஹீரோக்கள் கிடைக்காதபோதோ அல்லது ஹீரோக்களுக்கு கிடைக்கும் வசதிகள், மரியாதையை பார்க்கும்போதோ தாங்களும் ஹீரோவாகி விடலாம் என்கிற எண்ணம் சில இயக்குனர்களுக்கு ஏற்படும். இயக்குனர் சேரன், பிரவீன் காந்தி முதல் ஹரஹர மகாதேவகி இயக்குனர் சந்தோஷ் வரை இப்படி ஏதோ ஒரு காரணத்திற்காக அரிதாரம் பூசியவர்கள் தான். அந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் கோமாளி இயக்குனர்.. அதாவது கோமாளி படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்..
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன்பு அம்னீசியா என்கிற நோயை பின்னணியாகக் கொண்டு கோமாளி என்கிற படத்தை கலகலப்பாக உருவாக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து அவருக்கு அடுத்ததாக பட வாய்ப்புகள் வரும் எதிர்பார்த்த நிலையில் இரண்டு வருடங்களாகியும் அவரது புதிய பட அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில்தான் அவர் இயக்கவுள்ள புதிய படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என்றும் அதனால்தான் அவரது இரண்டாவது படம் இவ்வளவு தாமதம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.