நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர்.
அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா, தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதோடு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளையும் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறார்.
ஆண்ட்ரியா சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவியும். இந்நிலையில் தற்போது தான் குட்டி பாப்பாவாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை ஆண்ட்ரியா பதிவு செய்து இருக்கிறார்.மேலும் 'நான் குட்டி பிசாசாக இருந்தபோது எடுத்தது' என்று அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக பதிவு செய்து இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.